Jun 4, 2012

Ameer's New Look

ஆதிபகவன்' படத்திற்காக ஜெயம்ரவியிடம் நீளமாக தாடி வளர்க்க சொன்னார் அமீர். இப்போது படப்பிடிப்பு முடிந்த தருவாயில் அமீர் தாடியோடு சுற்றி வருகிறார். தமிழ் திரையுலகில் தற்போது நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சியில் அமீர் தாடியுடன் தான் கலந்து கொண்டு வருகிறார். ஆடிக்கு பின்னால் ஆவணி.. தெரியும்.. அமீரின் தாடிக்கு பின்னால்..? அமீர் அடுத்ததாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். அந்த வேடத்திற்காக தான் நீளமாக தாடி வளர்த்து இருக்கிறார். படத்திற்கு 'ஜிகாத்' என்று தலைப்பிட்டு இருக்கிறார். தலைப்பு சர்ச்சையை கிளப்புவது போல இருந்தாலும், படத்தின் கதை சாதாரண கதை தானாம். அதுமட்டுமல்லாது கமலுடன் இணையும் படம் குறித்து கமல் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லையாம். 'ஜிகாத்' படப்பிடிப்பு நடைபெறும்போது கமல் தேதிகள் ஒதுக்கினால், 'ஜிகாத்' படத்தினை ஓரங்கட்டி விட்டு, கமலை இயக்க திட்டம் இருக்கிறதாம். கமல் படத்தினை முடித்து விட்டு 'ஜிகாத்' படத்தினை திரும்பவும் துவங்குவாராம். இதற்காகத் தான் இந்த கதையில் தானே நாயகனாக நடிக்க முடிவு செய்தாராம் அமீர். COURTESY - CINEMAVIKATAN

No comments:

Post a Comment